உத்தம வில்லன் வெளியாகக் காரணம் ஞானவேல் ராஜாதான்! - நன்றி கூறும் லிங்குசாமி


உத்தம வில்லன் படம் வெளியாக காரணமாக இருந்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு இயக்குநர் லிங்குசாமி நன்றி தெரிவித்துள்ளார். கமல், பூஜாகுமார், ஆண்ட்ரியா, பார்வதி மேனன், மறைந்த இயக்குநர் பாலசந்தர் உள்ளிட்ட பலர் நடிக்க, ரமேஷ் அரவிந்த் இயக்கியிருக்கும் படம் 'உத்தம வில்லன்'. திருப்பதி பிரதர்ஸ் - ராஜ்கமல் நிறுவனங்கள் தயாரித்துள்ளன.

மே 1-ம் தேதி வெளியாக வேண்டிய 'உத்தம வில்லன்', பைனான்சியர்கள் கொடுத்த நெருக்கடி காரணமாக படம் வெளியாகவில்லை. இன்று காலை வெளியாகும் என்றார்கள். அப்படியும் வெளியாகவில்லை. இன்று பிற்பகலுக்குப் பிறகுதான் படம் வெளியானது. சென்னையில் உள்ள ஈராஸ் அலுவலகத்தில் இயக்குநர் லிங்குசாமி, ஞானவேல்ராஜா, சி.வி.குமார், நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், பைனான்சியர் அன்பு உள்ளிட்டவர்கள் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்து இதனை அறிவித்தார்கள்.

அப்போது இயக்குநர் லிங்குசாமி பேசுகையில், "ஒரு ரசிகனாக நான் கமல் படம் வெளியாகும் போது முதல் நாள் முதல் காட்சி சென்றுவிடுவேன். அவ்வாறு இப்படத்தை வெளியிடாமல் போனதுக்கு மன்னிப்பு கோருகிறேன். வெளிநாடுகளில் இப்படம் வெளியாகி பெரும் வரவேற்பு கொடுத்திருக்கிறது. தமிழ், தெலுங்கு, கர்நாடகா உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் இன்று பிற்பகல் காட்சிகளில் இருந்து இப்படம் வெளியாகிறது. இதுமட்டுமன்றி, இப்படம் வெளியாக எனக்கு உதவி புரிந்த ஞானவேல்ராஜாவுக்கு நான் மிகுந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய உதவியை நான் வாழ்நாளில் மறக்கவே முடியாது," என்றார்.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

 
Copyright © 2013. சினிமா செய்திகள் - All Rights Reserved
Template Created by ThemeXpose