கோலிவுட்டின் முன்னணி காமெடியன்களில் ஒருவர் சந்தானம். காமெடியனாக திரை உலகில் நுழைந்தவர் தற்போது ஹீரோவாகிவிட்டார். மக்களும் அவரை ஹீரோவாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.
மக்களின் ஆதரவோடு அவர் தொடர்ந்து ஹீரோவாக நடிக்க முடிவு செய்துள்ளாராம். இந்நிலையில் அவர் பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது தனது நண்பேன்டா ஆர்யா பற்றி பேசியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியதாவது :
ஆர்யாவுக்கு சைக்கிளிங் போவது மிகவும் பிடிக்கும். உடலை கும்மென்று வைக்க அவர் சைக்கிளிங் செய்து வருகிறார். அவருடன் சேர்ந்து நானும் சைக்கிளிங் செல்வேன். ஆர்யா என்னை செல்லமாக செல்லாக்குட்டி என்று தான் அழைப்பார், என்று சந்தானம் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment