ஒரு படம் எடுப்பதைவிட, அப்படத்தை வெளியிடுவதில் படக்குழுவினர் மிகுந்த பிரச்சனையால் அவதிப்படுகின்றனர்.
அந்தவகையில் வெளியாகாமல் பிரச்சனையில் சிக்கிக்கொண்டு வந்த படம் உத்தமவில்லன். நேற்று இப்படம் வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் இடையில் பிரச்சனை ஏற்பட்டு படம் வெளியாகாமல் போனது.
இப்பிரச்சனையை தீர்க்க நேற்று முதல் பேச்சுவார்த்தை நடந்துவந்தது. இதனையடுத்து சரத்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து படத்திற்கான பிரச்சனை தீர்ந்ததாகவும் படம் மதியம் முதல் ரிலீசாகும் என்று கூறினார்.
தமிழகத்தில் இன்று நண்பகல் 12.30 மணிக்கு மேல் சுமார் 400 தியேட்டர்களில் உத்தமவில்லன் படம் ரிலீசாகியுள்ளது.
0 comments:
Post a Comment