இயக்குனர் சரண் பேச்சுவாக்கில் கிடைக்கும் வார்த்தைகளை கொண்டு தான் தன் படத்துக்கு எப்போதும் தலைப்பாக வைப்பார். அப்படி அவர் வைத்த படங்களின் பெயர்கள் வந்த காரணத்தை தற்போது காணலாம்.
அட்டகாசம் படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு படம் பண்ணலாம் என்று அஜித்திடம் கேட்டிருக்கிறார் இயக்குநர் சரண். படம் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது ஒரிஜினல் என்ற வார்த்தைக்கு தமிழில் என்ன அசல் தானே என்று கேட்டிருக்கிறார் அஜித்.
அசல் நல்லாயிருக்கே என்று அதனையே அப்படத்துக்கு தலைப்பாக வைத்துவிட்டார் சரண்.
அதே போல அட்டகாசம் என்ற தலைப்பு முடிவாகும் முன்பு, இயக்குனர் சரணின் நண்பர் நீங்கள் அடுத்து இயக்கவிருக்கும் படத்தில் ரெண்டு அஜித்தாமே.. அட்டகாசமா இருக்குமே என்று சொல்லியிருக்கிறார். அட்டகாசம் நல்லாயிருக்கே என்று அத்தலைப்பை படத்துக்கு தலைப்பாக வைத்துவிட்டார் சரண்.
அஞ்சலி படத்தின் பாடல்கள் எப்படி வந்திருக்கிறது என்று ஏ.ஆர். ரகுமானிடம் கேட்டிருக்கிறார் எஸ்.பி.பி. அதற்கு ரகுமான் அமர்க்களம் என்று கூறியிருக்கிறார்.
அதுவே பின்னாளில் அஜித், ஷாலினி நடித்த அமர்க்களம் படத்தின் தலைப்பாகியது.
0 comments:
Post a Comment