நடிகர் கமல்ஹாசன் நடித்த உத்தம வில்லன் படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் இடையில் ஏற்பட்ட நிதி பிரச்சனையால் படத்தின் சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தது.
இதனால் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்கள். தொடர்ந்த பேச்சுவார்த்தையில் படம் நேற்று மாலை வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று படம் வெளியாகவே இல்லை.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் திரைப்பட சங்கத் தலைவர் கலைப்புலி எஸ். தாணு, தமிழகத்தில் அனைத்து தியேட்டர்களிலும் இன்று காலை உத்தம வில்லன் படம் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment