சமீப காலமாக அயல் நாட்டு படங்களை தழுவி படம் இயக்கும் கலாச்சாரம் தமிழில் பெருகி வருகிறது. இதில் விதிவிலக்காக கௌதம் மேனன் போன்ற இயக்குனர்கள் நேர்மையாக அவர்கள் எந்த படத்திலிருந்து தழுவி எடுத்தார்கள் என்பதை டைட்டில் கார்டிலேயே குறிப்பிட்டு விடுகின்றனர்.
ஆனா மற்ற இயக்குனர்களோ, அப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அப்படத்தினை தான் இயக்கியிருக்கும் விதத்தினை இயக்குனர்கள் சிலாகிக்கும் போது, ஏதோ பெரிதாக சாத்திருப்பார்களென தோன்றும். ஆனால் படம் வெளியான 24 மணி நேரத்தில் எந்த காட்சி எந்தெந்த படத்திலிருந்து திருடப்பட்டதென சமூக வலைதளங்களில் அம்பலப்படுத்துவதற்க்கென்றே ஓர் குழு இயங்கிவருகிறது. அவ்வகையில் நேற்று வெளியான வை ராஜா வை திரைப்படம் 2008ல் ஆங்கிலத்தில் வெளிவந்த 21 என்ற படத்தின் அப்பட்டமான தழுவல் என பேச்சு எழுந்துள்ளது. 21 படத்தின் திரைக்கதையில் ஒன்றிரண்டு மாற்றங்களை தவிர்த்து அப்படியே அப்படத்தின் கருவை எடுத்துள்ளதாக கூறுகிறார்கள். இதை எப்படியும் அவர்கள் ஒப்பு கொள்ள போவதில்லை.
இதில் தயாரிப்பாளர் தரப்பு தான் மிகவும் பரிதாபத்திற்க்குறிய ஜீவனாகி போய்விடுகின்றனர்.
0 comments:
Post a Comment