ஹார்ட் "பிரேக்கிங்" நியூஸ்... சன்னிக்கு கல்தா.. உள்ளே வந்தார் கைரா!
டிரிபிள் எக்ஸ் (xxx) படத்தில் சன்னி லியோனைத் தூக்கி விட்டு அவருக்குப் பதில் தற்போது கைரா தத் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சன்னிக்குக் கடும் போட்டியாக வந்து சேர்ந்துள்ளார் இந்த கைரா. சன்னி ஊட்டி என்றால் கைரா ஏழைகளின் ஊட்டியாக இருக்கிறார். இனிமேல் சன்னி சற்று கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த கைரா விளையாடி விடுவார் என்றும் எச்சரிக்கிறது பாலிவுட்.
பாலிவுட்டுக்கு வந்துள்ள புதுமுகம்தான் கைரா தத். சன்னியைப் போவே கவர்ச்சியிலும், செழுமையிலும் தாராளமாக இருக்கிறார் கைரா. இதனால் சன்னி கிடைக்காவதர்கள் பார்வை கைரா பக்கம் திரும்பி வருகிறதாம்.
ஏக்தா கபூர் டிரிபிள் எக்ஸ் என்ற படத்தை உருவாக்குகிறார். இதில் நடிக்க முதலில் சன்னியைத்தான் அவர் புக் செய்திருந்தார். தற்போது அவரை தூக்கி விட்டு கைராவை அவர் போட்டிருப்பதாக கூறுகிறார்கள்.
2013 கிங்பிஷர் காலண்டர் கேர்ள் போட்டியில் வென்றவர்தான் கைரா தத். மேலும் ஷாருக் கான், ஜான் ஆப்ரகாம், அக்ஷய் குமார் ஆகியோருடன் இணைந்து விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார்.
டிரிபிள் எக்ஸ், இந்தியாவின் முதல் "எராட்டிகா" படமாக கருதப்படுகிறது. இப்படத்தில் நடிக்க சன்னிதான் பொருத்தமானவர் என்று இத்தனை காலமாக நினைத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது கைரா புகுந்து விளையாடி விட்டார்.
நிலைமை இப்படி இருக்க குச் குச் லோச்சா ஹை படத்தில் நடித்துள்ள சன்னி லியோன் அப்படத்தின் பிரமோஷனுக்காக மும்பை மால் ஒன்றுக்குச் சென்றபோது அங்கு செக்ஸியான ஆட்டத்தைப் போட்டு கூடியிருந்த கூட்டத்தினரை குபீரென்று வியர்க்க வைத்தார்.
கவர்ச்சிப் பெருங்கடலான சன்னி லியோன் பாலிவுட்டில் எப்படியாவது பெரிய இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார். கிடைக்கும் நல்ல நல்ல வாய்ப்புகளைப் பயன்படுத்தி அவ்வப்போது பாலிவுட் கடலில் புயலைக் கிளப்பத் தவறுவதில்லை இவர். தற்போது குச் குச் லோச்சா ஹை என்ற படத்தில் நடித்துள்ள சன்னி, இப்படத்தின் பிரமோஷன் வேலைகளில் தற்போது பிசியாக இருக்கிறார்.
டிவியில் பிரபலமாகி சினி்மாவிலும் அசத்தி வருபவர் ராம் கபூர். இவர்தான் இப்படத்தின் ஹீரோவும் கூட. ராம் கபூர் உள்ளிட்ட படக் குழுவினருடன் சன்னி லியோன் பிரமோஷன்களில் கலந்து கொண்டிருக்கிறார்.
மும்பையில் உள்ள ஒரு மாலில் சமீபத்தில் பிரமோஷன் நடந்தது. அதில் கலந்து கொண்ட அத்தனை பேரின் கண்களும் சன்னி லியோன் மீதுதான். மொய்த்து எடுத்து விட்டன அத்தனை கண்களும்.
நிகழ்ச்சியின்போது கூடியிருந்தவர்களிடையே ஜாலியாகப் பேசிய சன்னி லியோன் ராம் கபூர் உள்ளிட்டோருடன் இணைந்து செக்ஸியான மூவ் போட்டு சின்னதாக நடனமும் ஆடி அனைவரையும் வசீகரித்தார்.
- Blogger Comment
- Facebook Comment
0 comments:
Post a Comment