அப்பாவோட ஆடிய அந்த நிமிஷம் இருக்கே அது தான் ஸ்பெஷல்.: ஸ்ருதி ஹாஸன்
அப்பா கமலுடன் சேர்ந்து மேடையில் நடனம் ஆடியது ஸ்பெஷலான தருணம் என நடிகை ஸ்ருதி ஹாஸன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 2015ம் ஆண்டு ஸ்ருதி ஹாஸனுக்கு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது. அம்மணி கை நிறைய படங்கள் வைத்துள்ளார். ஸ்ருதியின் மார்க்கெட் சூப்பராக உள்ளது என்றே கூற வேண்டும். அவருக்கு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரை உலகில் அதிக மவுசு உள்ளது. அதனால் தான் வாய்ப்புகள் அவர் வீட்டு வாசலில் காத்திருக்கின்றன.
ஸ்ருதி தற்போது தமிழில் விஜய்யின் புலி படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா அஜீத்தை வைத்து இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இந்தியில் இரண்டு படங்களிலும், தெலுங்கில் மகேஷ் பாபு படத்திலும் நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள கப்பார் இஸ் பேக் இந்தி படம் வரும் மே மாதம் 1ம் தேதி ரிலீஸ் ஆகிறது. மற்றொரு இந்தி படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இத்தனை பிசியாக இருக்கின்றபோதிலும் ஸ்ருதி அண்மையில் சென்னையில் நடந்த விருது விழாவில் கலந்து கொண்டு நடனம் ஆடினார். ஸ்ருதி விருது விழாவில் நடனமாடியது பெரிய விஷயமா என்று கேட்டால் ஆமாம் அவருக்கு இது பெரிய விஷயம் தான். காரணம் அவர் தனது தந்தை கமல் ஹாஸனுடன் சேர்ந்து மேடையில் ஆடியுள்ளார்.
மைக்கேல் மதன காமராஜன் படத்தில் வரும் ரம் பம் பம் ஆரம்பம் பாடலுக்கு ஸ்ருதி தனது அப்பாவுடன் ஆடினார். அப்பா கமல் ஹாஸனுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டார்.
அப்பாவுடன் டான்ஸ் ஆடியது குறித்து ஸ்ருதி ட்விட்டரில் கூறியிருப்பதாவது, மேடையில் என் தந்தையுடன் ஆடியது ஒரு மகளாக எனக்கு ஸ்பெஷல் தருணம்!!! என் அப்பா தான் சிறந்தவர் என்று தெரிவித்துள்ளார்.
- Blogger Comment
- Facebook Comment
0 comments:
Post a Comment