தமிழில் ‘கொக்கி’, ‘திருவண்ணாமலை’, ‘கரிமேடு’ உட்பட பல படங்களில் நடித்தவர், பூஜாகாந்தி. கன்னடத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் அவர், ‘அபிநேத்ரி’ என்ற படத்தை தயாரித்து நடித்தார். இப்படத்தின் கதை தனது ‘அபிநேத்ரியா அந்தரங்கா’ என்ற நாவலை தழுவி உருவாக்கப்படுகிறது. மற்றும் படத்தில் இடம்பெறும் காட்சிகளும், நாவலில் வரும் காட்சிகளும் ஒரேமாதிரி இருக்கிறது என்று, எழுத்தாளர் பாக்யா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த கீழ்கோர்ட், திடீரென்று வழக்கை தள்ளுபடி செய்தது. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் படம் ரிலீசானது.
இந்நிலையில், கீழ்கோர்ட் தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார் பாக்யா. இருதரப்பினைரையும் சமரச மையத்தில் பேசி, பிரச்னைக்கு தீர்வு காணும்படி கோர்ட் யோசனை தெரிவித்தது. பிறகு அங்கு நடந்த முக்கிய பேச்சு வார்த்தையில், எழுத்தாளருக்கு நான்கரை லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு தர பூஜாகாந்தி ஒப்புக்கொண்டார். தவணை முறையில் இந்த தொகையை அளித்த பூஜாகாந்தி, கடைசி தவணையாக ஒன்றரை லட்சம் ரூபாயை காசோலையாக அளித்தார். இப்பிரச்னையை சுமூகமாகப் பேசி தீர்த்துக்கொண்டதாக இருதரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
நாவலாசிரியரிடம் பூஜாகாந்தி முறையான அனுமதி பெற்றிருந்தால், குறைந்த விலைக்கு உரிமை பெற்றிருக்கலாம். தற்போது அவர் நஷ்ட ஈடாக அளித்த தொகையை விட இன்னும் குறைந்த தொகையே போதுமானதாக இருந்திருக்கும் என்று படவுலகில் கூறுகின்றனர்.
0 comments:
Post a Comment