தன் சித்தியுடன் சண்டை போட்டு காணாமல் போன அஞ்சலி அப்பாடக்கர் படம் மூலம் மீண்டும் கோலிவுட் பக்கம் திரும்பினார்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதேவேகத்தில் விமலுக்கு ஜோடியாக ”மாப்பிள்ளை சிங்கம்” படத்திலும் ஒப்பந்தமானார். இந்த இரண்டு படங்களிலும் பிஸியாக நடித்து வரும் அஞ்சலியின் நடவடிக்கையில் தற்போது மாறுபாடு காணப்படுகிறதாம்.
சொன்ன நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வராமல் தயாரிப்பாளர்களை நிறையவே கஷ்டப்படுத்துகிறாராம். அதோடு முன்பு மாதிரி நடந்து கொள்ளாமல் ரொம்பவே பந்தா செய்கிறாராம். வேறு வழியில்லாமல் படத்தை முடிக்க வேண்டும் என்று இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் பொறுத்துப் போகிறார்களாம்.
அதேசமயம் அஞ்சலியை மேலும் சில தமிழ்ப் படங்களில் நடிக்க வைக்க சிலர் நினைத்திருக்கிறார்கள். ஆனால் இப்போது அஞ்சலியின் நடவடிக்கை தெரியவந்ததால் அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்கலாம் என நினைத்த தயாரிப்பாளர்கள் கூட அவர்களது எண்ணத்தை மாற்றிக் கொண்டார்களாம். என்னம்மா அஞ்சலி இப்படி பண்றீயேம்மா..?
0 comments:
Post a Comment