கமலின் முந்தைய படங்களை மிஞ்சும் அளவிற்கு உத்தம வில்லன் நாளை பிரமாண்டமாக வெளிவரவிருக்கின்றது. இப்படம் உலகம் முழுவதும் சுமார் 1500 திரையரங்குகளில் வரவிருக்கின்றது.
இப்படத்தில் கே.பாலசந்தர் அவர்களை கௌரவிக்கும் விதமாக கமல் மற்றும் ரமேஷ் அரவிந்த் பல காட்சிகளை மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக படமாக்கியுள்ளார்கள்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு உலகநாயகன் நடிப்பில் படம் வெளிவரவிருப்பதால், ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பார்ப்பு நிலவி வருகின்றது. மேலும், தமிழகத்தில் பல இடங்களில் பேனர், கட் அவுட், போஸ்டர் என கலை கட்ட ஆரம்பித்துள்ளது.
இப்படம் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக திகழும் ஒருவரின் வாழ்க்கையை மையமாக கொண்டது என ரமேஷ் அரவிந்த் முன்பே தெரிவித்திருந்தார். மேலும், 8ம் நூற்றாண்டின் நாடக கலைஞராகவும் கமல் நடிப்பில் செம்ம விருந்து வைக்கவுள்ளார்.
தமிழக மக்கள் இப்படத்தை பார்க்க ஆவலுடன் இருப்பதற்கு, இப்படத்தின் டிக்கெட் முன்பதிவே ஒரு சாட்சி. அனைத்து தியேட்டர்களும் முதல் 3 நாளைக்கு தற்போதே ஹவுஸ்புல் தான்.
0 comments:
Post a Comment