காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர், நடிகை சார்மி. அவருக்கு தமிழில் அதிகம் வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு திரையுலகிற்கு சென்றார். அங்கு ஏராளமான தெலுங்கு படங்களில் கவர்ச்சி வேடங்களில் கலக்கி பல வருடங்கள் தெலுங்கு முன்னணி நடிகையாக திகழ்ந்தார். ஆனால் சமீபக்காலமாக தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் படங்கள் இல்லாததால் வீட்டிலேயே முடங்கி கிடந்தார் சார்மி. அவருக்கு கடைசி வாய்ப்பாக, அவருடைய நண்பர் புரி ஜெகனாத் தான் இயக்கும் "ஜோதிலட்சுமி" படத்தில் ஹீரோயின் வாய்ப்பு கொடுத்தார். இதற்கிடையில் 8 வருடத்துக்கு பிறகு உருவாகும் "மந்த்ரா 2"ம் பாகத்திலும் நடிக்கிறார். இதை எஸ்.வி.சுரேஷ் இயக்குகிறார்.
முதல்பாகத்தில் சார்மி கவர்ச்சியாக ஆடிய, "மஹா மஹா". என்ற பாடல் பரபரப்பாக பேசப்பட்டது. 2ஆம் பாகத்திற்காக சமீபத்தில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இதில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சின் உச்ச கட்டத்தில் ஆடியிருப்பதாக சார்மி கூறியுள்ளார்.
இதுகுறித்து சார்மி பேசியவை:
மஹா மஹா பாடல் ரசிகர்களால் மறக்க முடியாமல் இப்போதும் அதுபற்றி குறிப்பிட்டு பேசுகிறார்கள். மந்த்ரா 2ம் பாகத்துக்காக ஏற்கனவே ஆடியதைவிட 10 மடங்கு அதிகமாக, கவர்ச்சியாக ஒரு பாடலுக்கு ஆடி இருக்கிறேன். முதலில் 2ஆம் பாகத்தில் பாடல் வைக்காமல் ஹாலிவுட் பாணியில் படத்தை உருவாக்க எண்ணி இருந்தார் இயக்குநர். ஆனால் பலரும் கேட்டுக்கொண்டதால் டைட்டில் பாடல் வைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த பாடலை பார்த்தபிறகு ஏற்கனவே நான் ஆடிய கவர்ச்சி ஆட்டத்தை மறந்துவிடுவார்கள். படுகவர்ச்சியாக, உணர்ச்சியை தூண்டுவதாக, ஜாலியாக, கும்மாளமாக இப்பாடலுக்கு ஆடி இருக்கிறேன் என்றார்.
0 comments:
Post a Comment