சூர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்கிய 'அஞ்சான்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை என்றாலும் சூர்யாவும், லிங்குசாமியும் சோர்வடையாமல் மீண்டும் இருவரும் இணையவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இம்முறை சூர்யா படத்தை லிங்குசாமி இயக்கவில்லை என்றும், அவரது தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் சூர்யா நடிக்கவுள்ள படத்தை தயாரிக்க மட்டும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சதுரங்க வேட்டை இயக்குனர் வினோத்குமார் இயக்கவுள்ள சதுரங்க வேட்டை 2 படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளது. இதுகுறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ள நடிகை உள்பட மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment