லிங்குசாமியை வேதனைப்படுத்தும் சூர்யாவின் டயலாக்



வெங்கட்பிரபு இயக்கும் மாஸ் படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்ததுள்ளது. சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா, எமி ஜாக்சன் நடித்துள்ள இப்படம் மே 15 அன்று வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் மாஸ் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் டீசர் வெளியிடப்பட்டது. அதில் எதிர்பார்க்கலை இல்லை? நான் மறுபடியும் இப்படி வருவேன்னு எதிர்பார்க்கலை இல்லை? என்று சூர்யா வசனம் பேசுவது போல் மாஸ் டீஸர் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இது சிங்கம் படத்தில் சூர்யா பேசிய வசனம் தான் என்றாலும் மாஸ் படத்தில் சூர்யா பேசிய வசனம், அஞ்சான் படத்தின் தோல்வியை சுட்டிக்காட்டுவது போல் உள்ளதாக பலதரப்பட்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.

அதாவது அஞ்சான் தோல்வியிலிருந்து மீண்டு வந்திருப்பதாக சூர்யா சொல்வதாகவே அந்த வசனத்தை ரசிகர்கள் அர்த்தப்படுத்திக் கொள்கின்றனர். அதே அர்த்தம் தான் லிங்குசாமிக்கும் தோன்றி இருக்கிறது.

லிங்குசாமி தான் இயக்கிய அஞ்சான் படத்தின் தோல்வியை மீண்டும் நினைவுபடுத்துவது போல் சூர்யா இப்படி டயலாக் பேசி இருப்பது வருத்தம் அளிப்பதாக தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வேதனைப்பட்டிருக்கிறார.

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

 
Copyright © 2013. சினிமா செய்திகள் - All Rights Reserved
Template Created by ThemeXpose