புலி படத்தில் இடம்பெறும் வசன காட்சிகளின் படப்பிடிப்பு முழுவதும் வரும் ஏப்ரல் 30 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. அதன்பின்பு இரண்டு பாடல் காட்சிகள் மட்டுமே பாக்கியுள்ளது. இதில் விஜய்யுடம் ஹன்சிகா மற்றும் ஸ்ருதி ஹாசன் ஆகியோர் இடம்பெறவுள்ளனர்.
இந்த பாடல் காட்சிகளை எங்கு படமாக்குவது என்பதில்தான் தற்போது படக்குழுவினருக்கிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஒரு தரப்பு சீனாவில் படமாக்கலாம் என்றும் மற்றொரு தரப்பு கம்போடியாவில் படமாக்கலாம் என்றும் கூறுவதே இந்த குழப்பத்திற்கான காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
எனினும் சீனாவில் தற்போது குளிர் காலம் என்பதால் இந்த பாடல் காட்சிகளை கம்போடியாவில் படமாக்கவே அதிக வாய்பிருப்பதாக சொல்லப்படுகிறது. அங்கு சூரியவர்மான் கட்டிய அங்கர் வாட் கோவிலில் இதன் படப்பிடிப்பு நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment