சினிமாவில் கிண்டல் அடிப்பதற்கு இதுதான் வரையறை என்பது எதுவும் கிடையாது என்பதற்கு விந்தை படத்தில் வரும் ஒரு பாடல் காட்சியும், எம்.எஸ்.பாஸ்கர் கேரக்டரும் அமைந்துள்ளது. மண் தோன்றா காலத்தில் முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்குடி அதனால் நீ குடிப்பதில் தப்பில்லை என்று குடியை ஊக்கப்படுத்தும் பாடல் ஒன்று அமைந்துள்ளது. அதே போல எந்நேரமும் கையில் திருக்குறள் புத்தகத்தை வைத்துக்கொண்டு தூய தமிழ் பேசி வருகிறார் எம்.எஸ்.பாஸ்கர்.
இந்த படத்திற்கு இசையமைத்திருப்பவர் வில்லியம்ஸ். கதைக்கும், பாடலுக்கும் கொஞ்சமும் பொருத்தமில்லாமல் காட்சிகளை அமைத்துள்ளார் இயக்குனர். இளைஞர்களை மையப்படுத்தி படத்தை நகர்த்த வேண்டும். இப்போது தியேட்டர்களுக்கு இளைஞர்கள் தான் படையெடுக்கிறார்கள் என்பதை மனதில் வைத்து ஏகப்பட்ட அரைகுறை உடைய அழகிகள் படம் முழுக்க வருகிறார்கள். இதை வைத்து பார்க்கும் போது விந்தை திரைக்கு வந்தால் பேசப்படும் படமாக அமையும் என்பது உறுதியாக பேசப்படுகிறது. படம் விரைவில் திரைக்கு வர உள்ளன.

0 comments:
Post a Comment