சுந்தர்.சி என்றும் காமெடி படங்களை கொடுப்பதில் வல்லவர். இவர் தற்போது தயாரிப்பாளராகவும் களம் இறங்கியுள்ளார். அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்கும் படத்தில் வைபவ், ஓவியா, ஐஸ்வர்யா ஆகியோர் நடிக்கவுள்ளனர்.
இப்படம் சில வருடங்களுக்கு முன் சிவானந்தம் என்பவர் இயக்கிய ஹலோ என்ற குறும்படத்தின் ஒன் லைன் தான் என கூறப்படுகிறது.
கீழே கிடக்கும் செல்போன் ஒன்றை எடுக்கும் ஹீரோவுக்கு அதன் மூலம் பேய் பிடிக்க, அதன் பிறகு நடக்கும் காமெடி கலாட்டாவே படத்தின் கதை என கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment