வெற்றிபெற்றும் விஜய் அவார்ட்ஸை வாங்க மறுத்த அஜித் – அதிர்ச்சி தகவல்!

ajithவிஜய் விருதுகள் என்பது ஸ்டார் விஜய் தொலைக்காட்சி குழுமத்தால் தமிழ் திரைப்படத் துறையினருக்கு வழங்கப்படும் விருதுகளாகும். இவ்விருதுகள் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கொரு முறை வழங்கப்படுகின்றன. இந்த விருதுகளில் சிறப்பே பொதுமக்கள் ஆறு பிரிவுகளில் தங்களுக்குப் பிடித்தவர்களை வாக்குகள் மூலம் விருதுக்குத் தேர்ந்தெடுக்க முடியும் என்பதுதான்.
இவ்விருதுகளில் விருப்பமான நடிகருக்கான விருதை (Favorite Hero) யார் பெறுவார்கள் என்பதே ரசிகர்களின் பெரிய எதிபார்ப்பாக இருக்கும்.   இந்த வருடம் இந்த விருது யாருக்கு கிடைக்கும் என அஜீத், விஜய் ரசிகர்களிடையே கடும் போட்டி நிலவி வந்தது,  இந்த நிலையில், இந்த விருதிற்கு நடிகர் அஜித் அதிக வாக்குளை பெற்று முன்னணியில் இருந்ததும் அந்த விருதினை அவர் வேண்டாம் என சொன்னதாகவும் தகவல்கள் தற்சமயம் வெளிவந்துள்ளன.
விருதிற்கான வாக்குகள் செலுத்தும் முதல் நாள் முதலே அஜித் முன்னிலை வகித்து வந்ததும், ஆனால் இந்த விருதை இயக்குனர் பாலா கையால் வாங்க அவர் முன் வரமாட்டார் என்பதாலும், விருது நடிகர் அஜித்திற்கு வழங்கப்படவில்லை என கோலிவுட் முழுவதும் பரபரக்க படுகிறது.
அது சரி, நான் கடவுள் காலத்தில் இருந்தே இருவருக்கும் இருக்கும் பகை ஊர் அறிந்த விசயம்தானே.
பாலா கையால் விருது பெறுவதாக இருந்தால் அந்த விருதே எனக்கு தேவையில்லை என்று  நடிகர் அஜீத் கூறியதாக கோலிவுட் மற்றும் டிவி வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.  நடிகர் அஜித்தை இந்த விருதை பெற வைக்கவும், அவரை விழாவிற்கு வரவைத்து விழாவிற்கு மேலும் மெருகு சேர்க்கவும் விஜய் டிவி எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்ததால் வேறு வழி இல்லாமல் நடிகர் ரஜினிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.  இந்த விஷயம் எல்லாம் தெரிந்ததால்தான் நடிகர் ரஜினி நேரடியாக விழாவுக்கு வராமல் விழாவை புறக்கணித்ததாகவும் கூறப்படுகிறது
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

 
Copyright © 2013. சினிமா செய்திகள் - All Rights Reserved
Template Created by ThemeXpose