ஆந்திரா என்கவுண்டர் சம்பவம் படமாகிறது

Tamil movie shooting on Andhra red sanders encounter begins
ஆந்திராவில் அப்பாவி தமிழர்களை சுட்டுக்கொன்ற சம்பவம் படமாகிறது “தூக்கு மர பூக்கள் “
ஆந்திராவில் செம்மரக்கட்டை வெட்டினார்கள் என்று சொல்லி 20 தமிழர்களை சுட்டுக் கொன்ற உண்மை சம்பவத்தை மையமாக வைத்து தூக்குமர பூக்கள் என்ற படத்தை ஜெய விஜய சாமுண்டீஸ்வரி புரொடக்ஷன் – ஸ்காட் மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கிறது. முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்க உள்ளனர்.

திரைக்கதை, வசனத்தை கிரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார் எழுத கதை எழுதி இயக்குகிறார்கள் இரட்டையர்களான வி.ஆர்.காளிதாஸ், வி.அகஸ்டின்.

செம்மரக்கட்டை வெட்டினார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் மானிதாபமின்றி, துன்புறுத்தி, உடல் உறுப்புகளை சிதைத்து கொன்ற கொடூரத்தின் பின்னணி என்ன? என்ற உண்மை சம்பவத்தை வெளிப்படுத்தவே இப்படம் என்றார்கள் இயக்குனர்கள்.
ஒளிப்பதிவு - பாபு ராஜேந்திரன்
இசை - சுனில் சேவியர்
தயாரிப்பு மேற்பார்வை - ஜோதிமணி, ராஜசேகர், ராஜ்குமார். 

சம்பவம் நடைபெற்ற பகுதிகளிலேயே படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் நடிகர்கள் பற்றி அறிவிக்கப் படும் என்றார்கள் இயக்குனர்கள்.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

 
Copyright © 2013. சினிமா செய்திகள் - All Rights Reserved
Template Created by ThemeXpose