தனது திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கியவர் ஜோதிகா. பின்பு நீண்ட நாட்களாக திரையில் முகம் காட்டாத இவர் ஒரு நல்ல கதை கிடைத்ததால் மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார்.
எந்த மேடையிலும் பேசாமல் இருந்த இவர் 36 வயதினிலே திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசி அசத்தினார். இதனால் பல ஊடகங்கள் இவரை பேட்டி எடுக்க போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
என்ன தான் நான் திரைக்கு மீண்டும் வந்தாலும் நான் யாருக்கும் பேட்டி கொடுக்க மாட்டேன் என்று சொல்லி விட்டார். இரண்டு தமிழ் பத்திரிக்கை மற்றும் இரண்டு தொலைக்காட்சிகள் தவிர வேறு யாருக்கும் பேட்டி கொடுக்க மாட்டேன் என்று கண்டிஷனாக சொல்லிவிட்டார்.
0 comments:
Post a Comment