ராஜபக்‌ஷே பணத்தில் தான் அந்த 2 படமும் உருவானது- ராஜ்கிரண் கிளப்பிய சர்ச்சை

ராஜபக்‌ஷே பணத்தில் தான் அந்த 2 படமும் உருவானது- ராஜ்கிரண் கிளப்பிய சர்ச்சை - Cineulagam
தமிழ் சினிமாவில் ஹீரோவாக களம் இறங்கி தற்போது பல படங்களில் குணச்சித்திர நடிகராக கலக்கி வருபவர் ராஜ்கிரண். இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் சிவப்பு.
இப்படம் குறித்து இவர் பேசுகையில் ‘ஈழத் தமிழர் விடுதலை போராட்டம் பற்றிய உண்மையான படங்கள் எதுவும் தமிழில் இதுவரை வந்ததில்லை. சமீபத்தில் வெளியான ஈழம் தொடர்பானது என்று சொல்லப்பட்ட இரண்டு தமிழ்ப் படங்களும்கூட சிங்கள சார்புடன், ராஜபக்சே கொடுத்த பணத்தில் தயாரிக்கப்பட்டவைதான்.
அவை ஈழத் தமிழர் போராட்டத்தையும், விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனையும் கொச்சைப்படுத்திய படங்கள்தானே தவிர, ஈழத் தமிழர் பற்றிய உண்மையான படங்கள் அல்ல. இங்கு ஈழத்தமிழர்கள் குறித்த படத்தை நேர்மையாக இயக்க முடியாது, ஏனெனில் நமது அரசியல் அப்படி, அதனால் தான் சத்யசிவா சிவப்பு படத்தை ஒரு காதல் கதையாக உருவாக்கியுள்ளார்’ என கூறியுள்ளார்.
ஆனால், ராஜபக்‌ஷே பணத்தில் உருவான அந்த 2 படம் எது என்பதை கூற மறுத்து விட்டார்.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

 
Copyright © 2013. சினிமா செய்திகள் - All Rights Reserved
Template Created by ThemeXpose