நிருபர்களிடம் யுவன் வருத்தம் தெரிவித்தது ஏன்?
தென்னிந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களின் ஒருவராக திகழ்ந்து வரும் யுவன்ஷங்கர் ராஜா, சமீபத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியின்போது தன்னுடைய திருமணத்திற்கு மீடியா நண்பர்களுக்கு அழைப்பு விடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டதற்கு வருத்தம் தெரிவித்து கொண்டார்.
சமீபத்தில் நடைபெற்ற தன்னுடைய திருமணம் ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சி என்பதால் மீடியா நண்பர்களை அழைக்கவில்லை என்றும் விளக்கம் அளித்தார். மேலும் தான் இசையமைக்க ஒப்புக்கொள்ளும் படங்களை மிகவும் கவனத்துடன் தேர்வு செய்வதாகவும், அதிக படங்களில் இசையமைப்பதை விட நல்ல ஸ்கோப் உள்ள படங்களில் மட்டும் ஒப்புக்கொள்வதாகவும் கூறினார். மேலும் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளின் சூப்பர் ஸ்டார் படங்களுக்கு இசையமைக்க விரும்புவதாக கூறினார்.
மேலும் சூர்யாவின் 'மாஸ்' படத்தில் தமன் ஒரு பாடலுக்கு சிறப்பு இசையமைப்பாளராகத்தான் பணிபுரிந்துள்ளார் என்றும் அந்த படத்தின் மற்ற பாடல்களையும் பின்னணி இசையும் தன்னால் அமைக்கப்பட்டது என்றும் விளக்கம் அளித்துள்ளார். இந்த படத்தின் பின்னணி இசைக்கோர்ப்பை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
- Blogger Comment
- Facebook Comment
0 comments:
Post a Comment