கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் சீன் பை சீன் பவர்ஸ்டாரை கலாய்த்தார் சந்தானம். ஆனால் அந்த கலாய்ப்பே அவருக்கு ப்ளசாகி விட்டது. விளைவு, அதன்பிறகு சந்தானத்துடன் பவர்ஸ்டார் கலந்து கொண்ட சினிமா விழாக்களில் பவர் என்ட்ரி ஆனதுமே கைதட்டல் அரங்கங்களை அதிர வைத்தது.
அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளாத சந்தானம், அப்போதும் மைக்கில் பவரை கலாய்த்து வந்தார். குறிப்பாக, இதெல்லாம் தானா வந்த கைதட்டல் அல்ல. ஆள் சேர்த்து வாங்குற கைதட்டல். இங்க மட்டுமில்ல வெளியிலயும் ரெண்டு லாரியில அண்ணன் ஆளுங்களை கூட்டிட்டு வந்திருக்காரு என்றெல்லாம் பவர்ஸ்டாரை ஸ்பாட்டிலேயே கிண்டல் செய்தார் சந்தானம்.
ஆனால் அதற்கும் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல், சிரித்தபடியே அமர்ந்து கைதட்டலை வாங்கிக்கொண்டு வந்தார் பவர்ஸ்டார். இந்த நிலையில், பின்னர் தனது படங்களில் இருந்து பவரை ஓரங்கட்டினார் சந்தானம். இருப்பினும், தான் நடிக்கும் படங்களில், யாருடா இது பவர் ஸ்டாரோட தம்பி மாதிரி இருக்கு என்று அவரையும் டயலாக்கில் சேர்த்துக்கொண்டு பேசியும் வருகிறார் சந்தானம். ஆனால் அவர் பவர்ஸ்டார் என்று சொன்னதுமே தியேட்டர்களில் கைதட்டலும் கிடைக்கிறது.
இதைப்பார்த்த பவர்ஸ்டார், இப்போது தான் ஏறும் மேடைகளில், இங்க சில காமெடியன்கள் எங்கூட நடிக்க மறுக்கிறார்கள். ஆனால், என் பேரை சொல்லித்தான் அவங்க காமெடியே பண்றாங்க. அவங்களோட நடிப்புக்கு கிடைக்காத கைதட்டல், என் பெயரை சொன்னதுமே அவங்களுக்கு கிடைக்கிறது. எது எப்படியோ என்னை வச்சு நிறைய பேரு இங்க பிழைக்கிறாங்க என்று ஜாடைமாடையாக சந்தானத்தை தாக்கிப்பேசுகிறார் பவர்ஸ்டார்.
- Blogger Comment
- Facebook Comment
0 comments:
Post a Comment