கடந்த 2014ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியாகி உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களை கவர்ந்த சூப்பர் ஹிட் திரைப்படம் 'தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்" (The Fault In Our Stars). கேனசரால் பாதிக்கப்பட்ட ஒரு 16 வயது இளம்பெண், தன்னை போலவே கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் மீது காதல் கொள்ளும் விதத்தை இயக்குனர் ஜோஷ் பூனே மிக அற்புதமாக இந்த படத்தில் கூறியிருப்பார். ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய 'இதயத்தை திருடாதே'' படத்தின் சாயல் இந்த படத்தில் தெரிந்தாலும் உலகம் முழுவதும் பெருவாரியான ரசிகர்களால் பாஸிட்டிவ் விமர்சனத்துக்கு உள்ளான திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த படத்தை தற்போது பாலிவுட்டில் அதே பெயரில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தின் இரண்டு முக்கிய கேன்சர் நோயாளிகளின் கேரக்டர்களில் நடிக்க தீபிகா படுகோனே மற்றும் வருண் தவான் ஆகியோர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்திய ரசிகர்களுக்கு ஏற்றவாறு இந்த படத்தின் திரைக்கதையை சற்று மாற்ற இருப்பதாகவும் இந்த படத்தை இயக்கவுள்ள ஹோமி அடாஜானியா (Homi Adajania) தெரிவித்துள்ளார்.
இந்த படத்தை பாலிவுட் தயாரிக்கவுள்ள தகவலை பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்தின் சிஇஓ விஜய் சிங் அவர்களும் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
0 comments:
Post a Comment