நடுத்தெருவில் ஆடையை கிழித்து 'நான் கடவுள்' பட நடிகை மானபங்கம்


தேனியில் நான் கடவுள் படத்தில் பூஜாவுக்கு தோழியாக நடித்த முருகேஸ்வரி நடுரோட்டில் மானபங்கப்படுத்தப்பட்டுள்ளார். பாலா இயக்கிய நான் கடவுள் படத்தில் பூஜாவின் தோழியாக நடித்தவர் தேனி மாவட்டத்தில் உள்ள தேவதானப்பட்டியைச் சேர்ந்த முருகேஸ்வரி(38). தேவதானப்பட்டியில் வசித்து வரும் அவர் கடந்த சனிக்கிழமை அன்று வத்தலக்குண்டு சென்றுள்ளார்.

வத்தலக்குண்டில் இருந்து பேருந்து மூலம் தேவதானப்பட்டி வந்தார். பேருந்தில் இருந்து இறங்கிய அவர் வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார். அவர் தனியாக செல்வதைப் பார்த்த அதே பகுதியைச் சேர்ந்த 2 வாலிபர்கள் அவர் பின்னால் சென்றுள்ளனர். அந்த வாலிபர்கள் முருகேஸ்வரியை வழிமறித்து திடீர் என அவரது ஆடையை கிழித்து மானபங்கம் செய்தனர். 


இதனால் அதிர்ச்சி அடைந்த முருகேஸ்வரி உதவி தேட்டு அலறினார். அந்த வாலிபர்களோ முருகேஸ்வரியை தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து முருகேஸ்வரி தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபர்களை தேடி வருகிறார்கள்.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

 
Copyright © 2013. சினிமா செய்திகள் - All Rights Reserved
Template Created by ThemeXpose