ஒரே சாதிக்காரர்கள் அடித்துக் கொள்வது போல கதையிருந்தால் பிரச்சனையே இல்லை. யாரும் அப்படத்திற்கு எதிராக நாக்கு மேல பல்லு போட்டு பேசவே மாட்டார்கள். சமீபத்தில் வெளிவந்த ‘திலகர்’ திரைப்படமே அதற்கு உதாரணம். ஆனால் இருவேறு சாதிக்காரர்கள் பற்றிய கதையாக இருந்தால், சமுதாய காவலர்களுக்கு பதில் சொல்லி மாளாது. அப்படியொரு படமாகதான் இருக்கும் என்று சந்தேகத்தை கிளப்பிய ‘கொம்பன்’ நேற்று தணிக்கை செய்யப்பட்டிருக்கிறது. ஆச்சர்யம் என்னவென்றால், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அச்சப்பட்டதை போல, இந்த கதை இரு வேறு சாதியினரை பற்றிய கதையே இல்லை என்பதுதான்.
முதல் முறையாக ராஜ்கிரண் ஃபுல் காமெடி பண்ணியிருக்கிறார் என்று தகவல் கசிய விடுகிறது சென்சார் வட்டாரம். ஒரு மருமகனுக்கும் மாமனாருக்கும் இடையே இருக்கும் உறவை ஜாலியும் கேலியுமாக கூறியிருக்கிறாராம் டைரக்டர் முத்தையா. சமுத்திரக்கனி வில்லனாக நடித்திருக்கிறார். அந்த வில்லன் கூட, எந்த இடத்திலும் சாதி பெருமையையோ, வேறொரு சாதிக்கு எதிரான வார்த்தைகளையோ உபயோகிக்கவில்லை என்கிறார்கள்.
நிலைமை இப்படியிருக்க, எதற்காக காத்திருக்க வேண்டும்? ஏப்ரல் 2 ல் படம் ரிலீஸ் என்று திட்டவட்டமாக அறிவித்திருக்கிறது ஸ்டூடியோ கிரீன் நிறுவனம்.
0 comments:
Post a Comment