உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா நடித்த 'நண்பேண்டா' திரைப்படம் வரும் ஏப்ரலில் ரிலீஸாகவுள்ள நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஜய் மற்றும் நயன்தாரா குறித்து மனம் திறந்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தில் நயன்தாரா நடித்து கொண்டிருந்தபோதே தனது அவர் நல்ல நண்பர் என்றும், தன்னுடைய முதல் படமான 'ஒரு கல் ஒரு கண்ணாடி' என்ற படத்தில் நடிக்க அழைத்த போது அவர் நடிப்பில் இருந்து சில காலம் ஒதுங்கியிருக்க முடிவு செய்திருந்ததால் நடிக்க மறுத்ததாகவும், அதன் பின்னர் மீண்டும் அட்லியின் 'ராஜா ராணி' படத்தின் மூலம் அவர் ரீ எண்ட்ரி ஆன பின்னர் தன்னுடைய இரண்டாவது படமான 'இது கதிர்வேலன் காதல்' படத்தில் நடிக்க அழைத்தபோது மறுப்பேதும் சொல்லாமல் நடித்து கொடுத்தார் என்றும் உதயநிதி கூறியுள்ளார்.
நன்றாக தமிழ் பேசும், நன்றாக நடிக்கவும் தெரிந்த ஒருசில நடிகைகளில் நயன்தாராவும் ஒருவர் என்று கூறிய உதயநிதி தங்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்புறவு உள்ளதாகவும் தெரிவித்தார்.
ஒரு படத்தின் மிகப்பெரிய வெற்றி அல்லது அந்த படத்திற்கு கிடைக்கும் விருதுகள் இவை இரண்டில் நீங்கள் எதை அதிகம் எதிர்பார்ப்பீர்கள் என்று அவரிடம் கேட்ட கேள்விக்கு பதிலளித்த உதயநிதி, 'விருது வாங்கும் அளவுக்கு நான் பெரிய நடிகனில்லை என்பதால் படத்தின் மிகப்பெரிய வெற்றி மற்றும் வசூல்தான் தனக்கு முக்கியம் என்று சிரித்து கொண்டே கூறினார். மேலும் தன்னை திரையுலகில் பெரிதும் கவர்ந்த நடிகர் விஜய் என்றும், அவரது டான்ஸ் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.

0 comments:
Post a Comment