கடினமான ஸ்டெப்புகளை கூட புன்னகையான முகத்துடன் கலக்கலாக நடனமாடி விடுவார். எனவே அவருக்கு தீனிப்போடும் வகையில் நடன இயக்குனர்கள் ஸ்பாட்டுக்கு செல்வதற்கு முன்பே பயிற்சி எடுத்து கொண்டு தான் செல்வார்கள்.
அந்த வகையில் விஜய் தற்போது நடித்து கொண்டிருக்கும் புலி படத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வித்தியாசமான நடன அசைவுகள் கொடுக்கப்பட்டுள்ளதாம். அதையும் விஜய் அசால்ட்டாக ஆடி அசத்தி வருகிறாராம். ஒரு பாடலில் நடனமாடிய ஹன்சிகா, விஜய்யின் நடன வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறி கொண்டேயிருந்தாராம். இதனால் பல ரீடேக் எடுக்கவேண்டியிருந்ததாம்.
ஹன்சிகாவுக்காக தனது வேகத்தை குறைத்து கொண்டு நடனமாடினாராம் விஜய். இப்படியொரு ஸ்பீடான ஹீரோவை பார்த்ததே இல்லை என்று தனது வியப்பை வெளிப்படுத்தி வருகிறாராம் ஹன்சிகா.
0 comments:
Post a Comment