அஜீத்துடன் நடிக்கும் பிந்து மாதவியின் ஆசை: அடடா இப்படி ஆகிடுச்சே!!
'தல 56' படத்தில் அஜீத்தின் தங்கையாக பிந்து மாதவி நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் மீண்டும் நடிக்கும் படம் 'தல 56. படத்திற்கு அச்சமில்லை என்ற தலைப்பை சிவா தேர்வு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அது குறித்து சிவா இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் படத்தின் ஹீரோயினை வலைவீசித் தேடியுள்ளார் சிவா.
அஜீத்துக்கு ஏற்ற நாயகியை அலைந்து திரிந்து தேடி ஒரு வழியாக ஸ்ருதி ஹாஸனை ஒப்பந்தம் செய்துள்ளார் சிவா.
அஜீத் தான் எனக்கு மிகவும் பிடித்த ஹீரோ. என் கெரியரில் அவருடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று பிந்து மாதவி அவ்வப்போது கூறி வந்தார்.
'தல 56' படத்தில் இரண்டு நாயகிகள். அதில் ஸ்ருதி ஹாஸன் ஒருவர், மற்றொருவர் பிந்து மாதவி என்ற தகவல் காற்று வாக்கில் வந்தது.
'தல 56' படத்தில் அஜீத்தின் தங்கச்சி கதாபாத்திரம் மிகவும் வெயிட்டானதாம். அந்த கதாபாத்திரத்தில் விதியூலேகா ராமன் அல்லது பிந்து மாதவி நடிக்கலாம் என்று கூறப்பட்டது.
அஜீத்தின் ஜோடியாக நடிக்க ஆசைப்பட்ட பிந்து மாதவி தான் அவரின் தங்கச்சியாக நடிக்க உள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
- Blogger Comment
- Facebook Comment
0 comments:
Post a Comment