' மணி கணக்கில் காக்க வைக்கிறார்' காஜல் மீது தனுஷ் படக் குழு கோபம்

 ' மணி கணக்கில் காக்க வைக்கிறார்'  காஜல் மீது தனுஷ் படக் குழு கோபம்
தமிழ், இந்தி படங்களில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். இருமொழியில் மாறி மாறி நடிப்பதால் கால்ஷீட் ஒதுக்குவதில் அவ்வப்போது பிரச்னை ஏற்படுகிறது. இந்தி படங்களுக்கு பகல் நேரத்தில் கால்ஷீட் ஒதுக்கும் அவர், தமிழ் படங்களுக்கு இரவு நேர கால்ஷீட் தருகிறார். சில சமயம் இது மாறுபடுகிறது. சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் தனுஷ் பட குழுவை கடுப்பாக்கியது.இந்தியில் ரன்தீப் ஹுடாவுடன் படப்பிடிப்பில் பங்கேற்க மும்பை சென்றவர், பிறகு பகலில் தனுஷ் நடிக்கும் ÔமாரிÕ பட ஷூட்டிங்கிற்காக திரும்பி வந்தார். மேக் அப் அறைக்குள் சென்றவர் தயாராகி வருவதற்கு மணிக்கணக்கில் பட குழுவினரை காக்க வைத்தார்.

இது இயக்குனர் மற்றும் பட குழுவினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இதுபோன்ற சம்பவம் தொடர் கதையானதையடுத்து பட தயாரிப்பாளர், காஜலின் போக்குக்கு எதிர்ப்பு தெரிவித்தாராம். கேட்கும் சம்பளத்தை கொட்டிக்கொடுத்து காஜல் அகர்வாலிடம் கால்ஷீட் வாங்கினாலும் அவரை சொன்ன நேரத்திற்கு படப்பிடிப்பு அரங்கிற்கு வரவழைப்பதற்குள் பட குழுவினர் நொந்துபோய்விடுகிறார்களாம். இதுபற்றி சங்கத்தில் புகார் தருவது பற்றி தயாரிப்பு தரப்பு யோசித்து வருகிறதாம்.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

 
Copyright © 2013. சினிமா செய்திகள் - All Rights Reserved
Template Created by ThemeXpose