‘சவுகார்பேட்டை’யில் நடக்கும் கதை என்ன..?

‘சவுகார்பேட்டை’யில் நடக்கும் கதை என்ன..?
மாபெரும் வெற்றி பெற்ற ‘மைனா’, ‘சாட்டை’, ‘மொசக்குட்டி’ ஆகிய படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஜான்மேக்ஸ் தயாரிக்கும் அடுத்தப் படம் ‘சவுகார்பேட்டை’.
இந்தப் படத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக வித்தியாசமான வேடமேற்று நடிக்கிறார். கதாநாயகியாக ராய் லஷ்மி நடிக்கிறார். மேலும் சரவணன், விவேக், அப்புக்குட்டி, கோட்டா சீனிவாசராவ், சம்பத், கோவை சரளா, சுமன், ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – சீனிவாச ரெட்டி
இசை – ஜான் பீட்டர்,
பாடல்கள் – நா.முத்துக்குமார் & விவேகா
கலை – எஸ்.எஸ். சுசி தேவராஜ்
நடனம் – தினேஷ்
சண்டை – கனல் கண்ணன்
வசனம் – ஷாம் மேனன்
கதை, திரைக்கதை இயக்கம் –  V.C.வடிவுடையான்.
இவர் ஏற்கெனவே ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இவருடைய இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘கன்னியும் காளையும் செம காதலும்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
“சென்னையில் உள்ள ‘சவுகார்பேட்டை’ என்ற இடம் ஜனசந்தடி அதிகமுள்ள இடம் மட்டுமில்ல.. காசு, பணம் அதிகளவில் புழங்கும் இடமும்கூட. வட்டி பிஸினஸ் செய்யும் மார்வாடி குடும்பத்தினர் சென்னையில் அதிகமாக குடியிருப்பது இந்த ‘சவுகார்பேட்டை’யில்தான்..!
இந்தப் பேட்டையில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள்தான் படத்தின் கதை. இது காதல், ஆக்சன், செண்டிமெண்ட்,  திகில், சஸ்பென்ஸ் என்று எல்லாமும் கலந்த ஒரு கமர்ஷியல் படம். படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது..” என்றார் படத்தின் இயக்குநர் வி.சி.வடிவுடையான். 
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

 
Copyright © 2013. சினிமா செய்திகள் - All Rights Reserved
Template Created by ThemeXpose