ஐநா பிரநிதிகளை கண்கலங்க வைத்த இயக்குனர் கௌதமன்

UN representatives broke down in tears after watching Pursuit of Justice
2009ன் தமிழீழ போருக்கு பின்னர் ரகசியமாக தொடரப்படும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை உலகத்தின் பார்வைக்கு கொண்டு செல்லும் முயற்சியாக சகோதரி ரஜனி செல்லதுரை மற்றும் திரு.மணிவண்ணன் ஆகியோரது தயாரிப்பில், இயக்குனர் கௌதமன் தொகுப்பில் உருவான "Pursuit of Justice" என்ற ஆவணப்படத்தின் வெளியீடு (25-மார்ச்-2015, புதன்கிழமை) அன்று ஐநா அவையில் திருமதி. ரஜனி செல்லதுரை அவர்களது முயற்சியால் திரையிடப்பட்டது.
தமிழகத்தில் இருந்து ஈழம் சார்ந்த ஒரு ஆவணப்படம் ஐநாவில் திரையிடப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.
ஐநாவில் திரையிடப்பட்ட இந்த ஆவணப்படத்தை கண்ட ஐரோப்பிய ஒன்றியம், மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியம் ஆகியவற்றை சார்ந்த ஐநா பிரதிநிதிகள் கண்ணீர் விட்டு கலங்கினர்.
உலகத்தின் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டு ஒரு இன அழிப்பு தொடர்வதை தாங்கள் இந்த ஆவணம் மூலம் அறிந்துகொண்டதாக கூறினார். ஈழ பிரச்சனை தொடர்பாக தத்தம் நாட்டின் குடியரசு தலைவர்களிடம் கோரிக்கை வைத்து இதற்கு நல்லதொரு தீர்வை அளிக்க போராடப்போவதாகபும் உறுதி அளித்தனர்.
ஐநாவில் திரையிட்டது இந்த உண்மைகளை பன்னாட்டு அரங்கில் எதிரொலிக்கும் என்றாலும், தாய்த்தமிழ் நாட்டிலும் இந்த ஆவணம் கூறும் உண்மைகள் பல பெருமளவு சென்று சேரவில்லை என்பதால், இங்கே சென்னையின் வடபழனியில் உள்ள ஏ.வி.எம் அரங்கில் அதே நாள் அதே நேரத்தில் 25-மார்ச் அன்று மாலை 4:00 மணிக்கு தமிழ் தேசிய உணர்வாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்வில் நடிகர். திரு. சத்தியராஜ், திரு. சீமான், திரு.பெ.மணியரசன், திரு.ஜவாஹிருல்லா, திரு.த.வெள்ளையன், இயக்குனர் திரு. வி. சேகர், அற்புதம் அம்மா, திரு. டி.எஸ்.எஸ் மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆவணப்பட திரையிடலுக்கு பின்னர் தலைவர் ஆவணத்தின் தன்மைகள் குறித்து விபரமாக தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
"ராஜபக்சே ஒரு சிங்கள இனவெறியன், தமிழர்களும் புலிகளும் மீண்டேழுவார்கள், தமிழீழம் நிச்சயம் மலரும்" என்று முழங்கிய அண்மையில் காலமான தமிழீழ ஆதரவாளரும், சிங்கப்பூரின் தந்தை என்று போற்றப்படுபவருமான அமரர்.திரு.லீ குவான் யூ அவர்களின் உருவப்படத்திற்கு ஒரு நிமிட மௌன அஞ்சலியும் அதன் பின்னர் மலர் தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

 
Copyright © 2013. சினிமா செய்திகள் - All Rights Reserved
Template Created by ThemeXpose