மீண்டும் அஜித் மச்சினி......
அஞ்சலி பாப்பாவை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்து விட முடியாது. மறந்தவர்களுக்கு க்ளூ ஷாலியின் தங்கச்சி பாப்பா, தல அஜீத்தின் மச்சினி.
குழந்தை நட்சத்திரமாக 50 படங்களுக்கு மேல் நடித்து, இரண்டு தேசிய விருதுகளை வாங்கியவர். அதன் பிறகு படிக்கச் சென்று விட்டார். இடையில் ஒய் என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடித்தார். தொடர்ந்து நடிக்காமல் படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்.
சென்னை கிறிஷ்டியன் கல்லூரியில் விஷ்காம் படித்து விட்டு மாஸ்டர் டிகிரி படிப்பிற்காக சிங்கப்பூர் சென்று விட்டார். அங்கு விஷ்காமுடன், சினிமா இயக்கம், நடிப்பு, மார்கெட்டிங் படித்தார். சென்னையில் படிக்கும்போது கர்நாடக சங்கீதம், பரத நாட்டியம், மேற்கத்திய நடனங்களும் கற்றார்.
தற்போது சிங்கப்பூர் படிப்புகள் முடிந்து சென்னை திரும்பி விட்டார். திரும்பிய கையோடு அழகான போட்டோசூட் முடித்துள்ளார். விரைவில் தமிழ் படங்களில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார். இதற்காக அப்பா பாபு கதை கேட்க ஆரம்பித்திருக்கிறார். ஒரு சுபயோக சுபதினத்தில் ஷாமிலி நடிக்கும் படத்தின் அறிவிப்பு வரும்.
- Blogger Comment
- Facebook Comment
0 comments:
Post a Comment