இன்றும் என்றும் நான் கமலஹாசன் ரசிகை

எப்போதும் என்னை கவர்ந்தவர் கமல்ஹாசன்- கௌதமி - Cineulagam
கமலஹாசன் நடிக்கும் உத்தம வில்லன் படம் தெலுங்கிலும் தயாரிக்கப்பட்டு உள்ளது. படத்தின் தெலுங்கு பட பாடல் வெளியிட்டு விழா ஐதராபாத்தில் நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டார்.
விழாவில் கமலஹாசன், படத்தின் கதாநாயகிகள் ஆண்ட்ரியா, பூஜாகுமார், இயக்குனர் ரமேஷ் அரவிந்த், இசையமைப்பாளர் ஸ்ரீராம், தெலுங்கு பட விநியோகஸ்தர் கல்யாண், கமல் மகள் ஸ்ருதி ஹாசன், கவுதமி மற்றும் திரையுலக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்
இவ்விழாவில் பலரும் தங்கள் பங்களிப்பு க்கு பேசனாலும் கௌதமி பேசியது ரசிக்கும் படியாக இருந்தது
அதாவது நான் எத்தனையோ படத்தில் கதாநாயகியாக நடித்து உள்ளேன். வாழ்க்கையில் எத்தனையோ கட்டங்களை தாண்டி வந்து உள்ளேன். எனது அபிமான நடிகர் கமலஹாசன் தான். அன்றும், இன்றும் என்றும் நான் அவரது ரசிகை எனவும் கூறியுள்ளார்.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

 
Copyright © 2013. சினிமா செய்திகள் - All Rights Reserved
Template Created by ThemeXpose