ஜெய்யுடன் நடிக்க திரிஷா மறுப்பு


திரிஷாவுக்கு பட அதிபர் வருண் மணியனுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. திருமண தேதி இன்னும் முடிவாகவில்லை. திருமணத்தையொட்டி திரிஷா நடிப்புக்கு முழுக்கு போடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் திருமண நிச்சயதார்த்தத்துக்கு பிறகு 2 தெலுங்கு படம், சிம்பு, ஜெயம் ரவி உள்ளிட்டவர்களுடன் 3 தமிழ் படங்கள் என பட வாய்ப்புகள் குவிந்தன. ஏற்கனவே திரிஷா-ஜெயம் ரவி நடித்த ‘பூலோகம்‘ படம் திரைக்கு வராமல் இருக்கிறது.மார்ச் மாதம் திரிஷா திருமணம் நடக்கும் என முன்பு தகவல் வெளியானபோது அவர் நடித்து முடித்த படங்கள் திரைக்கு வரும்வரை திருமணத்தை தள்ளிப்போட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் தரப்பில் கோரப்பட்டது.

 தற்போது பட வாய்ப்புகள் நாளுக்குள் நாள் அதிகரித்து வருவதால் மீண்டும் திருமண தேதியில் குழப்பம் வருமோ என்று உறவினர்கள் சந்தேகம் எழுப்பினர். இதையடுத்து ஒப்புக்கொண்ட படங்களோடு தற்போதைக்கு நடித்து முடிக்கலாம், திருமணத்துக்கு பிறகு புதிய படங்களை ஒப்புக்கொள்வதுபற்றி முடிவு செய்யலாம் என திரிஷா எண்ணியிருப்பதாக அவரது தரப்பு தெரிவிக்கிறது. இதற்கிடையில் திரு இயக்க ஜெய் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க பேச்சு நடத்தி வந்த திரிஷா தற்போது அப்படத்தை ஏற்க மறுத்துவிட்டார்.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

 
Copyright © 2013. சினிமா செய்திகள் - All Rights Reserved
Template Created by ThemeXpose