‘பேசாம வில்லனா நடியேன் சித்தப்பு’... நடிகரைக் கலாச்சிபை செய்த ரசிகர்கள்!
சமீபத்தில் தனது ரசிகர்களைச் சந்தித்தார் தம்பி நடிகர். தனது புதிய பட ரிலீசை முன்னிட்டு இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சந்திப்பின் ஒரு பகுதியாக நடிகரிடம் ரசிகர்கள் கேள்வி கேட்டார்கள். நடிகரும் அதற்கு பொறுமையாக இன்முகத்துடன் பதிலளித்து வந்தார். அப்போது ரசிகர்களிடம் நான் எந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் எனக் கேட்டுள்ளார் நடிகர்.
அதற்கு ரசிகர் ஒருவர், ‘நீங்கள் ஹீரோவாக நடிப்பதை விட்டு விட்டு பேசாமல் வில்லனாகி விடுங்களேன். அப்படி நடித்தால் எங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்' எனத் தெரிவித்துள்ளார். ரசிகரின் இந்தப் பதிலால் நடிகர் கொஞ்சம் கலங்கித் தான் போய் விட்டார். அத்தோடு சந்திப்புக்கு நன்றி வணக்கம் கூறி கிளம்பி விட்டாராம். விட்டா, நடிக்கிறதையே விட்டுடுங்கனு சொல்லிடுவாங்களோனு பயந்துட்டாரா.... !
- Blogger Comment
- Facebook Comment
0 comments:
Post a Comment