இப்போதெல்லாம் முன்னணி நடிகர்கள் நடிப்பதை தவிர்த்து பல படங்களை தயாரிக்கவும் ஆரம்பித்து விட்டனர்.
விஷால், ஆர்யா, தனுஷ், விஜய் சேதுபதி என பல வெற்றி நாயகர்கள் தயாரிப்பு நிறுவனங்களை தொடங்கி தங்கள் படம் மட்டுமில்லாது மற்ற நடிகர்களின் படங்களையும் தங்கள் கம்பெனி படத்தில் நடிக்க வைத்து வருகின்றனர்.
இதில் தற்போது முன்னோடியாக இருந்து வருபவர் தனுஷ். தனது படத்தை தயாரிப்பது மட்டுமில்லாமல், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி போன்ற நடிகர்களையும் நடிக்க வைத்து வருகிறார்.
தொடர்ச்சியாக பல படங்களை தயாரிக்க, தனுஷ் கதைகளையும் ஒருபுறம் கேட்டு வருகிறாராம். இதனால் கோலிவுட்டில் வளர்ந்து வரும் சில நடிகைகள் தனுஷை அணுகி, அவரது வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க சான்ஸ் கேட்டு வருகின்றனராம்.
0 comments:
Post a Comment