லிங்கா, என்னை அறிந்தால் படங்களுக்குப்பிறகு அனுஷ்கா தமிழில் நடிக்கும் புதிய படம் இஞ்சி இடுப்பழகி. தேவர்மகன் படத்துக்காக ரேவதியைப்பார்த்து கமல் பாடும் இஞ்சி இடுப்பழகி என்ற பாடல்தான் இந்த தலைப்பை கேட்டதும் ஞாபகத்துக்கு வரும். அந்த அளவுக்கு பாட்டு ரொம்ப பேமஸ். ஆக, அந்த பாட்டு வரியையே இப்போது அனுஷ்கா நடிக்கும் படத்துக்கு சூட்டியிருப்பதால் அனுஷ்காவின் இடுப்பு ஏரியாக்களை சுடச்சுட சுட்டுத்தள்ளுவார்கள் என்று கூறப்படுகிறது. ஆனபோதும் சமீபத்தில் அப்படத்தின் பூஜைக்காக சென்னைக்கு வருகை தந்திருந்த அனுஷ்கா இடுப்பை புல்லும் கவர் பண்ணித்தான் வந்திருந்தார்.
மேலும், இஞ்சி இடுப்பழகி பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்? என்று அனுஷ்காவை மீடியாக்கள் கிசுகிசுத்தபோது, சொல்வதற்கு எக்கச்சக்கமாக விசயம் இருக்கு. ஆனா இப்ப எதையும் நான் அவுட் பண்ண முடியாது. மீறி நான் சொன்ன இடுப்ப நொடிச்சிடுவாங்க தெரியுமா? என்று நைசாக எஸ்கேப் ஆகி விட்டார்.
ஆனால் இஞ்சி இடுப்பழகியின் ஸ்பெசல் பற்றி அப்படக்குழுவிடம் விசாரித்தபோது, இதுக்கு முன்னாடி சிம்ரன் போன்ற எத்தனையோ நடிகைகளின் இடுப்பழகை நம்ம ரசிகருங்க பார்த்திருப்பாங்க. ஆனா இந்த படத்துல பார்க்கப்போற அனுஷ்காவோட இடுப்பழகு ரொம்ப புதுசா இருக்கும். அதேசமயம் கிளுகிளுப்பாவும் இருக்கும். முக்கியமா அனுஷ்காவோட இடுப்ப மையமா வச்சே ஒரு இடுப்பு டான்ஸ் பாட்டும் படத்துல இருக்கு. அது ரொம்ப பெரிய ஹைலைட்டாக இருக்கும் என்று லைட்டாக அனுஷ்காவின் இடுப்பு ரகசியத்தை லீக் பண்ணுகிறார்கள்.
ஆக, லுங்கி டான்ஸைத் தொடர்ந்து அனுஷ்காவின் இடுப்பு டான்ஸ் கொட்டு முழக்கத்துடன் கோடம்பாக்கத்தை கலக்கப்போகிறது என்கிறார்கள்.
- Blogger Comment
- Facebook Comment
0 comments:
Post a Comment