சினிமாவிற்கு அரசியலை கொண்டு வராதீர்கள் என்று சில வருடங்களுக்கு முன் அஜித் கூறினார். அந்த வார்த்தையில் அத்தனை ஆழம் உள்ளது. சண்டியர் என்று டைட்டில் வைத்ததற்கு படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார் கிருஷ்ணசுவாமி.
பின் விருமாண்டியாக வந்த அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதேபோல் சமீபத்தில் சண்டியர் என்ற பெயரில் ஒரு படம் வந்தது, அதை கண்டுக்கொள்ள கூட ஆள் இல்லை.
தற்போது கொம்பன் படம் வெளிவந்தால் தென் மாவட்டங்களில் மாபெரும் ஜாதி கலவரம் உண்டாகும் என கிருஷ்ணசுவாமி நீதிமன்றத்தில் வழக்க தொடுக்க, இன்று அவருக்கும், நீதிபதிகளுக்கும் படம் திரையிடப்பட்டது.
அப்போது படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே நிறுத்த சொல்வது, எனக்கு அந்த வசனம் புரியவில்லை, மறுபடியும் போடுங்கள் என நச்சரித்துள்ளார். இதனால் பொறுமை இழந்த நீதிபதிகள் தியேட்டரை விட்டே வெளியேறிவிட்டார்கள்.
இன்று அவர்கள் அறிக்கை சமர்ப்பித்தால்தான் 2 ந் தேதி படம் வெளிவரும். இதனால், தயாரிப்புக்குழு இவர் மேல் கடும்கோபத்தில் உள்ளதாம். கொம்பன் இறங்குவாரா? என்று இன்று மாலைக்குள் தெரிந்துவிடும்.
0 comments:
Post a Comment