சிம்புவின் அடுத்தப்பட தயாரிப்பாளர், இசையமைப்பாளர் யார்?
வணக்கம் சென்னை படத்தை இயக்கிய கிருத்திகா உதயநிதியின் புதிய படத்தில் சிம்பு ஹீரோவாக நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிவா- ப்ரியா ஆனந்த் ஜோடி சேர்ந்து நடித்த வணக்கம் சென்னை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநரானவர் கிருத்திகா உதயநிதி. வணக்கம் சென்னை படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். இந்நிலையில், கிருத்திகாவின் புதிய படத்தில் சிம்பு ஹீரோவாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கும் அனிருத் தான் இசை அமைக்கிறார்.
இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க வைக்க முன்னணி நடிகையிடம் பேசி வருகிறார்களாம். இப்படத்தை அழகான காதல், ரொமான்ஸ் மற்றும் சென்டிமென்ட் கலந்த கமர்சியல் படமாக உருவாக்க இருக்கிறார்களாம்.
இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற கதாபாத்திரத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இம்மாத இறுதியில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. மே மாதம் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
சிம்பு நடிப்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக எந்தப் படமும் வெளியாகவில்லை. அவர் நடித்துள்ள வாலு, வேட்டை மன்னன் மற்றும் இது நம்ம ஆளு ஆகிய படங்கள் ரிலீசுக்குத் தயாராக உள்ளன.
இது தவிர கௌதம்மேனன் இயக்கத்தில், ‘அச்சம் என்பது மடமையடா', செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படம், கிருத்திகா உதயநிதியின் புதிய படம் என கைவசம் 3 படங்களோடு உள்ளார் சிம்பு.
- Blogger Comment
- Facebook Comment
0 comments:
Post a Comment