உலகில் யாரும் இதுவரை செய்திராத வடிவேலுவின் “எலி” நடிப்பு – சம்மர் டிரிட்

eliமுழுக்க முழுக்க நகைச்சுவைக் காட்சிகளால் மட்டுமே அமைக்கப்பட்டு எடுக்கப்படும் படம் “எலி”. வைகைப்புயல் வடிவேலு, இயக்குனர் யுவராஜ் தயாளன் கூட்டணியில் உருவாகம் இரண்டாவது படம் இது.

1960களின் பிண்ணனியில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தை சிட்டி சினி கிரியேஷன்ஸ் சார்பாக ஜி சதிஷ் குமார் தயாரிக்கிறார்.
கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி சென்னையில் தொடங்கிய இப்படத்தின் படபிடிப்பு இரவுபகலாக இடைவிடாமல் நடைப்பெற்று வருகிறது.
பின்னி மில் வளாகத்தில் அமைக்க பெற்ற நட்சத்திர வீடு, பழமையான வீடுகள், பிரமாண்டமான வீடுகளின் உள்கட்டமைப்புகள், வில்லனின் ரகசிய இருப்பிடம் என 15க்கும் மேற்ப்பட்ட பிரம்மாண்ட அரங்குகள் கோடிகணக்கில் கலை இயக்குனர் தோட்டாதரணியால் அமைக்கப்பட்டு, வசனகாட்சிகள் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டன.
மேலும் பல கோடி ருபாய்க்கும் செலவில் நடனவீடு செட் அமைக்கப்பட்டு அதில் 15 நாட்களுக்கு மேலாக, புகழ்பெற்ற மும்பை நடனக்கலைஞர்கள் ஆட, பழம்புகழ் நடன இயக்குனர் தாரா அவர்களின் நடன அமைப்பில் பாடல் படமாக்கப்பட்டது.
இந்தபடத்தின் கதையையும், தனது புதுவிதமான கதாபாத்திரத்தையும் கேட்டு கதாநாயகியாக நடிக்க சம்மதித்தார் நடிகை சதா. கவர்ச்சியிலும் காமெடியிலும் விருந்து படைக்கிறார். சதாவின் நகைச்சுவை காட்சிகள் புது அனுபவம் தரும்.
தொடர்ந்து படப்பிடிப்பில் இருக்கும் எலி ஏப்ரல் இறுதியில் அனைத்து பணிகளும் நிறைவு பெற்று மே மாதம் திரைக்கு வருகிறது.
குழந்தைகள், பெண்கள் என அனைவரையும் பார்க்கும்வண்ணம் நகைச்சுவைக்கும் மட்டும் முதலிடம் தந்து எடுக்கப்படும் இந்த படம் 2015ம் ஆண்டின் கோடைக்கால குதுகலம்.
இந்தப்படத்தில் புகழ்பெற்ற சிறப்பம்சம் ஒன்றும் உண்டு. பூனைகள் துரத்தும்போது எலி எப்படி சமாலிக்குமோ, அதே போன்று சூப்பர் சுப்பராயன் சண்டைப்பயிற்சியில், வைகைபுயல் வடிவேலு எலியாக தனது நடிப்பில் பிரம்மாண்டமான சண்டைக்காட்சியில் நகைச்சுவையால் அசத்தியிருக்கிறார்.
உலகில் யாரும் இதுவரை செய்திராத வடிவேலுவின் “எலி” நடிப்பு – குழந்தைகளுக்கு சம்மர் டிரிட்.

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

 
Copyright © 2013. சினிமா செய்திகள் - All Rights Reserved
Template Created by ThemeXpose