உலக நாயகன் கமல்ஹாசன் படம் பார்த்து தான் பலரும் புரியாமல் புலம்புவார்கள். தற்போதே அவரே ஒரு விஷயத்திற்காக புலம்பியுள்ளார். நேற்று, உத்தம் வில்லன் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் அவருடைய வீட்டிலேயே நடந்தது.
இதில் பேசிய கமல் ‘பிரச்சனைகள் எப்போதும் என்னை மட்டுமே குறி வைக்கின்றன, தசவதாரம் என்னுடைய கதை என்று ஒருவர் கூறினார், மும்பை எக்ஸ்பிரஸ் தலைப்பு வைக்க கூடாது என்றார்கள்.
மேலும், சண்டியர் என்று தலைப்பும் வைக்க கூடாது என்று கூறி, படத்தின் தலைப்பை மாற்ற வைத்தார்கள். ஆனால், அதே டைட்டிலில் ஒரு படம் தற்போது வெளிவந்துள்ளது. சிலர் இது நல்ல வண்டி யார் வேண்டுமானுலும் ஏறிக் கொண்டு பயணம் செய்யலாம் என்று என்னை நினைத்து விடுகிறார்கள் போல’ என கமல் பேசியுள்ளார்.
0 comments:
Post a Comment