தமிழில் முன்னணி நாயகர்களுள் ஒருவராக இருக்கும் சூர்யாவிற்கு தெலுங்குத் திரையுலகிலும் நல்ல வரவேற்பு உள்ளது. கஜினி படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றதிலிருந்தே அவருக்கென்று அங்கும் ரசிகர்கள் உருவாகியுள்ளனர். அவரும் கடந்த சில மாதங்களாகவே நேரடித் தெலுங்குப் படம் ஒன்றில் நடிப்பதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறார் என்கிறார்கள். அதற்காக தெலுங்கின் முன்னணி இயக்குனரான திரிவிக்ரம் சீனீவாசை சந்தித்துப் பேசியுள்ளாராம். அவர் இயக்கியுள்ள சன் ஆப் சத்தியமூர்த்தி திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது. அந்தப் படம் வெளியான பின் சூர்யா நடிக்கும் படத்தை இயக்குவதற்காகத்தான் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சூர்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாஸ் திரைப்படத்தில் நடித்து முடிக்க உள்ளார். அடுத்து விக்ரம் குமார் இயக்கத்தில் என்ற படத்தில் நடிக்கப் போகிறார். இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாரிக்கப் போவதாக சொல்லப்படுகிறது. சூர்யாவின் தம்பி கார்த்தியும் தற்போது நாகார்ஜுனாவுடன் இணைந்து தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் புதிய படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்த ஆண்டில் அண்ணன், தம்பிகள் இருவரும் தெலுங்குப் பட உலகில் நேரடியாகக் கால் பதிக்க உள்ளனர்.
0 comments:
Post a Comment