2014 தேசிய விருதுபெற்ற படத்துக்கு யார் தயாரிப்பாளர்? வெடிக்கும் சர்ச்சை..
"2014 ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. தமிழில் சிறந்த படம் என்ற பிரிவில் குற்றம் கடிதல் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பிரம்மா ஜி என்ற புதுமுக இயக்குநர் இயக்கிய இந்தப்படத்தை சிறிஸ் பிக்சர்ஸ் என்ற பேனரில் சிறிஸ் என்பவர் தயாரித்தார்.
குற்றம் கடிதல் படத்தை எடுத்து முடித்துவிட்ட சிறிஸ் அதை வெளியிட முடியாத அளவுக்கு பொருளாதார நெருக்கடியில் சிக்கியபோது, பிரபல விநியோகஸ்தரான ஜே.சதீஷ்குமார் அவருக்குகைகொடுத்திருக்கிறார்.
குற்றம் கடிதல் படத்தை தானே வெளியிடுவதாக சொல்லி இருக்கிறார் சதீஷ்குமார். பரஸ்பர ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிறிஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜே.எஸ்.கே. பிலிம் கார்ப்பரேஷன்ஸ் இணைந்து படத்தை தயாரித்ததுபோல் குற்றம் கடிதல் படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையிலேயே பின்னர் நடைபெற்ற சென்னை இண்டர்நேஷ்னல் பிலிம் பெஸ்டிவலில் குற்றம் கடிதல் படத்துக்கு விருது கிடைத்தபோது சிறிஸ் மற்றும் சதீஷ்குமார் இணைந்து விருதைப் பெற்றுள்ளனர். குற்றம் கடிதல் படத்துக்கு தற்போது தேசிய விருது கிடைத்திருக்கிறது.
அப்படத்தின் தயாரிப்பாளராக இப்போது தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி வருகிறார் ஜே.எஸ். சதீஷ்குமார். இதுதான் தற்போது சர்ச்சையாகி இருக்கிறது. தானும் ஒரு தயாரிப்பாளராக இருக்கும்போது குற்றம் கடிதல் படத்தின் தயாரிப்பாளராக சதீஷ்குமார் பெயர் மட்டும் இடம்பெற்றுள்ளது எப்படி? என்று சிறிஸ் தரப்பில் சர்ச்சையைக்கிளப்பி இருக்கிறார்கள். அதானே... எப்படி அவர் பேர் மட்டும்? குற்றம் கடிதல் படத்தின் தணிக்கை சான்றிதழில் தயாரிப்பாளர்கள் என்று சிறிஸ் மற்றும் சதீஷ்குமார் பெயர்கள் உள்ளன. ஆனால் தேசிய விருதுக்கான விண்ணப்பத்தில் சிறிஸ் பெயரை போடாமல் தன் பெயரை மட்டும் போட்டுக் கொண்டாராம் சதீஷ்குமார். அச்சச்சோ... தப்பாச்சே...!
- Blogger Comment
- Facebook Comment
0 comments:
Post a Comment